சிறந்த கலைஞனாகவும் பன்முகத்திறன் கொண்டவர் நடிகர் தனுஷ். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான ஜகமே தந்திரம் படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தின் ஷூட்டிங்கை முடித்து விட்டு. அத்ரங்கி ரே எனும் பாலிவுட் படத்தில் நடிக்கவிருந்தார் தனுஷ். 

லாக்டவுன் முடிந்து இயல்பு நிலை திரும்பியவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு கார்த்திக் நரேன் இயக்கவிருக்கும் D43 படத்திலும் நடிக்கவிருக்கிறார். வரிசையாக பல திரைப்படங்களில் நடித்து வந்தாலும். இவர் இயக்கவுள்ள திரைப்படம் நான் ருத்ரன். இது தனுஷுக்கு இரண்டாவது படமாகும். தேனாண்டாள் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் நாகர்ஜுனா, அதிதி ராவ் முக்கிய ரோல்களில் நடிக்கின்றனர். மேலும் எஸ்ஜே சூர்யா, சரத்குமார், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலரும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் அற்புதமான பதிவு ஒன்றை செய்துள்ளார். காதல் கொண்டேன் திரைப்படம் வெளியாகி இன்றோடு 17 வருடம் ஆகிவிட்டது. இதற்காக செல்வராகவனுக்கு நன்றி கூறி பதிவு செய்துள்ளார். காலத்தால் அழியாத இந்த காதல் காவியத்தை கொண்டாடதோர் இருக்கவே முடியாது. 2003-ம் ஆண்டு வெளியான இப்படம் செல்வராகவனின் செழிப்பான படைப்புகளில் ஒன்று. தனுஷ் எனும் மாபெரும் கலைஞனை உலகிற்கு அடையாளம் காட்டிய திரைப்படம். 

உலகத்திலேயே மிகவும் ஆபத்தான உணர்வு காதல். அதுவும் நட்பு காதலாக மாறி, அதையும் ஒருதலையாக அனுபவிக்கும்போதுதான் உணர்வுகள் உச்சிக்குச் செல்லும் என்பதை செதுக்கியிருப்பார் செல்வா எனும் சிற்பி. பெற்றோர்கள் ஆதரவின்றி அநாதையாக ஆசிரமத்தில் வளர்ந்த இளைஞன், வெளியுலகத்தில் அடியெடுத்து வைக்கும் அவனுக்குள் நிகழும் மாற்றமே படத்தின் கதையாக மாறும்.

என் பேரு வினோத்... உங்க பேரு ? ஓ திவ்யாவா.. என்று தனிமையில் தனுஷ் பேசும் வசனம் துவங்கி.. திவ்யா திவ்யா.. திவ்யா திவ்யா என கதறல் வரை கச்சிதம் காண்பித்திருப்பார் தனுஷ். தேவதையை கண்டேன், நெஞ்ஜோடு கலந்திடு, மனசு ரெண்டும் என தரமான காதல் மருந்துகளை நம்முள் செலுத்தியிருப்பார் யுவன் ஷங்கர் ராஜா எனும் இசை மருத்துவர். இத்திரைப்படத்தின் 17 ஆண்டு நிறைவை ரசிகர்களோடு கொண்டாடுவதில் பெருமை கொள்கிறது நம் கலாட்டா.