இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் படம் D43. ஜிவிபிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த பட்டாஸ் படத்தை தயாரித்த சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனமே இத்திரைப்படத்தை தயாரிக்கிறது.

sathyajyothi

இந்நிலையில் இத்திரைப்படம் குறித்த அப்டேட்டை இசையமைப்பாளர் ஜிவிபிரகாஷ் பதிவு செய்துள்ளார். அவரது ட்விட்டர் பதிவில், D43 படத்திற்காக 2 ட்யூன்களை லாக் செய்துவிட்டதாகவும், மிகவும் எக்சைட்டிங்கான ஒருவர் இப்பாடலை எழுதவுள்ளார் என்பதையும் அப்பதிவில் தெரிவித்துள்ளார். 

gvprakash gvprakashkumar

இந்த D43 படத்தில் நடிகர் பிரசன்னா முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்ற செய்தி சமீபத்தில் தெரியவந்தது. D43 திரைப்படத்தை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கிய சூரரைப் போற்று, விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் தலைவி போன்ற படங்களும் ஜிவி பிரகாஷ் கைவசம் உள்ளது.