பேட்ட படத்தின் வெற்றியை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் தனது அடுத்த படத்தில் தனுஷுடன் இணைகிறார்.2016-லேயே தொடங்க வேண்டிய இந்த படம் சில காரணங்களால் தள்ளி போனது.Y Not ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர்.

Dhanush D40 Shoot Happening At Jaisalmer Rajasthan

D40 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி ஹீரோயினாக நடிக்கிறார்.சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்ககிறார்,இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

Dhanush D40 Shoot Happening At Jaisalmer Rajasthan

இந்த படத்தில் கலையரசன்,மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று கடந்த மாதம் நிறைவடைந்தது.இதனை தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தான் மற்றும் ஜெய்சால்மர் ஆகிய இடங்களில் தற்போது நடைபெற்று வருகிறது என்ற தகவல் கிடைத்துள்ளது.

Dhanush D40 Shoot Happening At Jaisalmer Rajasthan