வடசென்னை படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறனுடன் தனுஷ் மீண்டும் இணையும் படம் அசுரன்.இந்த படத்தை கலைப்புலி தாணுவின் V Creations நிறுவனம் தயாரிக்கிறது.மலையாள நடிகை மஞ்சு வாரியர் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார்.G.V.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

Dhanush Asuran Velmurugan Croons GV Prakash Music

பசுபதி,பாலாஜி சக்திவேல்,ஆடுகளம் நரேன்,பவன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Dhanush Asuran Velmurugan Croons GV Prakash Music

இந்த படத்தின் பாடல்கள் ரெகார்டிங் குறித்து அவ்வப்போது இசையமைப்பாளர் G.V.பிரகாஷ் ரசிகர்களிடம் அப்டேட் செய்து வருகிறார்.இதேபோல் தற்போது ஒரு மாஸான அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.ஆடுகளம் படத்தில் ஓத சொல்லால பாடலை பாடிய வேல்முருகன் இந்த படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார் என்று அறிவித்துள்ளார்.