வடசென்னை படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறனுடன் தனுஷ் மீண்டும் இணையும் படம் அசுரன்.இந்த படத்தை கலைப்புலி தாணுவின் V Creations நிறுவனம் தயாரிக்கிறது.மலையாள நடிகை மஞ்சு வாரியர் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார்.G.V.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

பசுபதி,பாலாஜி சக்திவேல்,ஆடுகளம் நரேன்,பவன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படம் அக்டோபர் 4ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது இந்த படத்தின் பின்னணி இசையமைக்கும் வேலைகளை தொடங்கியுள்ளதாக படத்தின் இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.