மனைவி மீது சந்தேகம் அடைந்த கணவன் துண்டு துண்டாக வெட்டிக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

டெல்லி கிராரி பகுதியில் உள்ள யாதவ் என்கிளேவ் காலனியில் அஷு - சீமா தம்பதியினர், தங்களது 3 குழந்தைகளுடன் வசித்து வந்தனர். தங்களது வீடு அந்த காலத்து வீடு என்பதாலும், அது எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் என்பதாலும், தனது வீட்டை பிரேம் நகர் பகுதிக்கு அஷு மாற்றி உள்ளார்.

husband kills wife

புதிய வீட்டிற்குச் சென்ற பிறகு, மனைவி சீமாவின் நடத்தையில் மீது கணவருக்குச் சந்தேகம் வந்துள்ளது. இது தொடர்பாக இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டையும் வந்துள்ளது. 

இந்நிலையில், பழைய வீட்டிலிருந்து பொருட்களை எடுத்துவரவேண்டும் என்று கூறி, மனைவி சீமாவை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, இருவருக்குள்ளும் மீண்டும் சண்டை வந்துள்ளது. இதில், ஆத்திரமடைந்த அஷு, சீமாவை கடுமையாகத் தாக்கி உள்ளார். இதில், அவர் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து, அவரை கத்தியால் குத்தி, உடலைத் துண்டு துண்டாக வெட்டி கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

husband kills wife

இதனையடுத்து, மனைவி சீமாவின் அம்மாவுக்கு போன் செய்து, “உங்கள் மகளைக் கொன்றுவிட்டேன்” என்று கூறிவிட்டு, போலீஸில் சரணடைந்துள்ளார். இதனையடுத்து, சீமாவின் உடலைக் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.