தல அஜித் நடிப்பில் தீரன் படத்தை இயக்கிய வினோத் இயக்கம் பெயரிடப்படாதா படத்தின் ஷூட்டிங் கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கியது.ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது.அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடித்து வருகிறார்.

ஷ்ரத்தா ஸ்ரீநாத்,ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் மூத்த நடிகர் டெல்லி கணேஷ் இந்த படத்தின் ஷூட்டிங்கில் இணைந்துள்ளார்.அஜித்தும் இவரும் ஒன்றாக நடித்து வரும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன என்ற தகவல்கள் கிடைத்துள்ளன.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த திடீர் Update காரணமாக தல ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.