பேட்ட படத்தின் ப்ளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் தர்பார். ஏ.ஆர்.முருகதாஸ் இந்த படத்தை இயக்கியுள்ளார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படம் பொங்கல் 2020க்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

darbar

நயன்தாரா இந்த படத்தின் ஹீரோயினாக நடித்துள்ளார். நிவேதா தாமஸ்,யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. 

darbar

தற்போது படத்திலிருந்து 6 பாடல்கள் வெளியான நிலையில், 7-ம் பாடலான கண்ணுல திமிரு பாடல் காப்பிரைட் காரணமாக வெளிவராமல் உள்ளது. திருநங்கைகள் பாடிய இந்த பாடல் இசை வெளியீட்டு விழாவில் போடப்பட்டது. ஆனால் ஆல்பத்தில் இடம்பெறவில்லை. இசையமைப்பாளர் தேவா உருவாக்கிய அண்ணாமலை படத்தின் தீம் இசை இதில் உள்ளது என்பது கூடுதல் தகவல். விரைவில் இந்த பிரச்சனை முடிந்து பாடல் வெளியாகும் என்ற ஆவலில் உள்ளனர் ரசிகர்கள்.