சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 167-வது படமான தர்பார் படத்தை AR முருகதாஸ் இயக்கி வருகிறார். ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். நயன்தாரா, யோகிபாபு, பிரதீக், ஸ்ரீமன் போன்ற நட்சத்திரங்கள் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கவுள்ளனர். 

darbar

பேட்ட படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்த நிஹாரிகா பசின் கான் இந்த படத்தில் காஸ்ட்டியூம் டிசைனராக பணியாற்ற உள்ளார். படத்தின் போஸ்டர் வெளியாகியது. மிகவும் ஸ்டைலிஷாக உள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் சூப்பர்ஸ்டார் ரசிகர்கள். சமீபத்தில் கொட்டாச்சியின் மகளான மானஸ்வி படத்தில் இணைந்தார்.

darbar darbar

தர்பார் படப்பிடிப்பு மும்பையில் துவங்கி தற்போது ஜெய்பூரில் நடந்து வருகிறது. தர்பார் பாடலுக்கு ரஜினி மற்றும் நயன்தாரா சிங்கிள் டேக்கில் நடமாடியது குறித்து ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் பதிவு செய்துள்ளார். மேலும் நடனக்கலைஞர் பிருந்தாவை பாராட்டி கூறியுள்ளார்.