சின்னத்திரையில் தனது நடனத்தால் அசத்தலான அங்கீகாரத்தைப் பெற்றவர் நடன இயக்குநர் சாண்டி. தமிழ் சினிமாவிலும் கால் பதித்து வெற்றி பெற்றுள்ளார். ரஜினியின் காலா படத்தில் பணியாற்றிய இவர், பின்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு, அங்கு பாடல்கள், நடனம் என ஜாலி ரகளைகளின் மூலம் பிரபலமானார். சினிமா பாடல்களை ரீமிக்ஸ் செய்து அங்கு நடந்த செயல்களை வைத்து சாண்டி பாடிய பாடல்களுக்கு ரசிகர்கள் இருந்தனர். அதோடு அவரது மகள் லாலாவும் எல்லோருக்கும் பரிச்சயமானார்.

சாண்டி மாஸ்டர் பிக்பாஸ் சீசனில் இறுதி வரை இருந்து இரண்டாம் இடம் பிடித்தார் என்பதும் அனைவருக்கும் நினைவிருக்கும். பிக் பாஸில் சாண்டியின் மனைவி சில்வியா மற்றும் குழந்தை லாலா ஆகியோரும் அதிகம் பிரபலம் ஆனார்கள். பிக் பாஸுக்கு பிறகு சினிமாவில் பிரபலம் ஆன சாண்டி பல முன்னணி நடிகர்களுடன் பணியாற்றி வருகிறார். 

இந்நிலையில் சாண்டியின் மனைவி சில்வியா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். தற்போது இரண்டாவது குழந்தைக்காக சாண்டி மற்றும் குடும்பம் காத்திருக்கிறது.

சமீபத்தில் சில்வியாவுக்கு வளைகாப்பு நடைபெற்று இருக்கிறது. அதன் புகைப்படங்களை சில்வியா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். தற்போது அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி உள்ளன. ரசிகர்களும் அவர்களுக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.

தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்திலும் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றியுள்ளார் சாண்டி. அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் அவரது ரசிகர்கள்.