தமிழ் செய்திகள்

தமிழில் பேசி அசத்தும் சல்மான் கான் ! வீடியோ உள்ளே

By | Galatta |

தமிழில் பேசி அசத்தும் சல்மான் கான் ! வீடியோ உள்ளே

தமிழில் பேசி அசத்தும் சல்மான் கான் ! வீடியோ உள்ளே
September 11, 2019 13:13 PM IST

இந்தியன் சினிமாவின் மைக்கேல் ஜாக்சன் என்று அழைக்கப்படுபவர் பிரபுதேவா.நடன இயக்குனராகவும்,நடிகராகவும் தமிழ் மக்களின் நெஞ்சத்தில் இடம் பிடித்தார்.2007-ல் தளபதி விஜயை வைத்து போக்கிரி படத்தை இயக்கி வெற்றி கண்டு இயக்குனராகவும் தனது முத்திரையை பதித்தார்.

Dabangg 3 Tamil Motion Poster Video Salman Khan

தமிழில் சில படங்கள் மட்டுமே இயக்கிய பிரபுதேவா பின் பாலிவுட்டில் வான்டெட்,ரவுடி ரத்தோர் உள்ளிட்ட படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றது.பின்னர் நடிப்பில் கவனம் செலுத்தி வந்த பிரபுதேவா.தற்போது ஹிந்தி சூப்பர்ஸ்டார் சல்மான் கான் நடிப்பில் உருவாகிவரும் தபங்-3 படத்தை இயக்குகிறார்.

Dabangg 3 Tamil Motion Poster Video Salman Khan

இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.சோனாக்ஷி சின்ஹா,கிச்சா சுதீப் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தின் அனைத்து மொழிகளுக்குமான தமிழ்நாடு உரிமையை KJR ஸ்டுடியோஸ் கைப்பற்றியுள்ளது.

Dabangg 3 Tamil Motion Poster Video Salman Khan

தற்போது இந்த படத்தின் Firstlook மற்றும் ரிலீஸ் தேதியை வெளியிட்டுள்ளனர்.இந்த படம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.சல்மான் கான் தமிழில் பேசும் இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Load More

பிற சமீபத்திய செய்திகள் View More More