அசுரன் படத்தின் அசுர வெற்றியை அடுத்து தனுஷ் எதிர்நீச்சல்,காக்கி சட்டை,கொடி படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவான பட்டாஸ் படத்தில் நடித்திருந்தார்.இந்த படம் கடந்த ஜனவரி 15ஆம் தேதி பொங்கலையொட்டி வெளியானது.இந்த படத்தில் தனுஷ் அப்பா மகன் என்று இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

இந்த படத்தில் ஹீரோயினாக சினேகா,மெஹரீன் பிர்சாடா இருவரும் நடித்துள்ளனர்.பிரபல தெலுங்கு நடிகர் நவீன் சந்திரா இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.சத்ய ஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிதந்திருந்தனர்.விவேக் மெர்வின் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளனர்.இந்த படம் ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து தனுஷ் ஜகமே தந்திரம்,கர்ணன் படங்களில் நடித்து வந்தார்.ஜகமே தந்திரம் படத்தின் ரிலீஸ் கொரோனா காரணமாக தள்ளிப்போயுள்ளது.கர்ணன் படத்தின் ஷூட்டிங்கை கிட்டத்தட்ட முடித்துள்ளார் தனுஷ்.இவற்றை தவிர கார்த்திக் நரேன் இயக்கத்தில் D 43,சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் D44,ஹிந்தியில் அத்ராங்கி ரே,ராட்சசன் இயக்குனருடன் ஒரு படம்,வெற்றிமாறனுடன் ஒரு படம் என செம பிஸியாக இருக்கிறார் தனுஷ்.

D 43 படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கின்றனர்.கார்த்திக் நரேன் இயக்கும் இந்த படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.இந்த படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.மாளவிகா மோஹனன் இந்த படத்தின் ஹீரோயினாக நடிப்பார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.மாஸ்டர் படத்தை தொடர்ந்து மேலும் ஒரு பெரிய ஹீரோவுடன் ஜோடி சேருகிறார் மாளவிகா மோஹனன்.இந்த செய்தியை தனுஷ் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.