வாலு, ஸ்கெட்ச் படங்களை இயக்கியவர் விஜய் சந்தர். அவர் தற்போது விஜய்சேதுபதியை வைத்து இயக்கி வரும் படம் சங்கத்தமிழன். படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகி பெரியளவில் ஈர்த்தது.

இந்தப்படத்தில் விஜய்சேதுபதியுடன் ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். படத்தின் இசையை விவேக்-மெர்வின் ஆகியோர் இசையமைக்கிறார்கள். கடந்த மார்ச் 1-ஆம் தேதி அன்று இந்தப்படத்தின் படபிடிப்பு தொடங்கி சீராக நடைபெற்று வருகிறது.

விஜயா ப்ரொடுக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சூரி, ஸ்ரீமன் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். நேற்றோடு நடிகை ராஷி கண்ணா தனது படப்பிடிப்பை முடித்துவிட்டார் என்று தெரியவந்தது. இன்று முதல் படத்தின் டப்பிங் பணிகளை துவங்கவுள்ளர் என்று தெரியவந்தது.