திரை ரசிகர்களை நகைச்சுவை மழையில் நனையச் செய்தவர் நடிகர் கவுண்டமணி. பல தலைமுறை கடந்தும் இவரது நகைச்சுவை ரசிகர்களை ஈர்த்து வருகிறது. திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டாலும், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தனது காமெடி காட்சிகள் மூலம் மகிழ்விக்கிறார். இன்று மீம் கிரியேட்டர்களின் கடவுளாக திகழ்கிறார் கவுண்டமணி. 

Cricketer Subramani Badrinath Meets Goundamani

இந்நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் தனது ட்விட்டர் பக்கத்தில் கவுண்டமணியை சந்தித்தது  குறித்து புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார். அப்பதிவில், பல் மருத்துவரை சந்திக்க சென்ற போது அங்கே புகழ்பெற்ற தமிழ் காமெடி நடிகர் கவுண்டமணி அவர்களை சந்தித்தேன் என்று பதிவு செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் கவுண்டமணியின் அரசியல்ல இதெல்லாம் சாதாரணப்பா என்ற வசனத்தையும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

Cricketer Subramani Badrinath Meets Goundamani

கடந்த 2016-ம் ஆண்டில் வாய்மை எனும் படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு கவுண்டமணி எந்த படத்திலும் நடிக்கவில்லை. பல நகைச்சுவை நடிகர்கள் இவரை ரோல் மாடலாக கொண்டே நடித்து வருகின்றனர். கவுண்டமணியின் கவுன்ட்டர் காமெடியை மீண்டும் பார்க்க ஆவலில் உள்ளனர் நகைச்சுவை விரும்பிகள்.