விஜய் டிவியில் ஒளிபரப்பாகி அனைவரின் மனம்கவர்ந்த நிகழ்ச்சியாக சமீபத்தில் இருந்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி.இந்த நிகழ்ச்சியின் வெற்றி இந்த பங்கேற்ற அனைவரையும் பெரிய இடத்துக்கு கொண்டுபோயுள்ளது.இரண்டாவது சீசனில் பங்கேற்ற பலரும் பல படங்களில் செம பிஸியாக பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியை மீடியா மேசன்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வழங்கினர்.தற்போது நிலவி வரும் கொரோனா சூழலால் பலரும் தங்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு மிகவும் கடினமான ஒரு சூழ்நிலையை சந்தித்து வருகின்றனர்.இவர்களுக்கு உதவும் நோக்கில் பலரும் தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் மீடியா மேசன்ஸ் சார்பில் குக் வித் கோமாளி நட்சத்திரங்கள் பங்குபெற்ற Music With Comalis என்ற Fundraiser லைவ் நடத்தி அதன் மூலம் நிதி திரட்டி உள்ளனர்.ஒரு நாள் முழுவதும் தொடர்ந்த இந்த லைவில் பல குக் வித் கோமாளி நட்சத்திரங்களும் கலந்துகொண்டனர்.

அப்படி திரட்டிய நிதியை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு அளிப்போம் என்றும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.தற்போது அந்த லைவ் மூலம் வந்த ரூ.16 லட்சத்தை முதல்வரை நேரில் சந்தித்து வழங்கியுள்ளனர் மீடியா மேசன்ஸ் குழுவினர்.இவர்களின் இந்த செயலை பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

View this post on Instagram

A post shared by Ravoofa H.k (@ravoofa.h.k)