விஜய் டிவி தமிழ் தொலைக்காட்சிகளில் மக்களின் மனம் கவர்ந்த ஒரு சேனல்.தங்களது வித்தியாசமான நிகழ்ச்சிகள் மூலமாகவும்,தொடர்கள் மூலமாகவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர்.இந்த தொலைக்காட்சியில் வேலைபார்த்த பலரும் தற்போது சினிமாவில் பிரபலன்களாக உள்ளனர்.

சிவகார்த்திகேயன்,சந்தானம் போன்ற முக்கிய நடிகர்களை உருவாக்கியது விஜய் டிவி தான்.பல துணை நடிகர்கள்,காமெடி நடிகர்கள்,இயக்குனர்கள் கதாசிரியர்கள் என்று பலரையும் அடையாளம் கண்டுள்ளது விஜய் டிவி.மேலும் கலக்கப்போவது யாரு,சூப்பர் சிங்கர் உள்ளிட்ட தொடர்களின் மூலம் தமிழகத்தில் மூலை முடுக்கில் இருக்கும் திறமைகளையும் கண்டுபிடிக்க விஜய் டிவி தவறுவதில்லை.

கடந்த வருடமும் குக் வித் கோமாளி என்ற தொடரை அறிமுகம் செய்தது விஜய் டிவி.சமையல் போட்டியில் நகைச்சுவை கலைஞர்களை இறக்கி அசத்தினர்.இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் செம பிரபலமாக இருந்தது.மேலும் இந்த தொடரில் பங்கேற்ற அனைவரும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்களாக மாறிவிட்டனர்.

குறிப்பாக புகழ்,பாலா,சிவாங்கி,மணிமேகலை,வனிதா விஜயகுமார்,ரம்யா பாண்டியன் உள்ளிட்டோர் செம பாப்புலராக இருந்து வருகின்றனர்.தற்போது இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனை விஜய் டிவி நவம்பர் 14 ஆம் தேதி முதல் சனி-ஞாயிறு கிழமைகளில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பி வருகிறது.இரண்டாவது சீசனும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தற்போது ஒளிபரப்பாகி வரும் இரண்டாவது சீசனில் முக்கிய போட்டியாளராக பிரபல மாடலும்,நடிகையுமான பவித்ரா லக்ஷ்மி பங்கேற்று வருகிறார்.இந்த தொடரின் மூலம் இளைஞர்கள் மத்தியில் கனவுக்கன்னியாக அவதரித்துள்ளார் பவித்ரா.இவரை போல பலரும் ட்விட்டர் கணக்குகளை தொடங்கி சில தவறான வேலைகளை செய்து வந்துள்ளனர்.இதனை கேள்விப்பட்ட பவித்ரா,இதுகுறித்து விளக்கமளிக்க தனது ஒரிஜினல் ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடீயோவை பதிவிட்டுள்ளார்,தனக்கு இருக்கும் ட்விட்டர் பக்கம் இதுதான் என்பதை தெளிவுபடுத்திய பவித்ரா,தனது பெயரை சில தவறாக பயன்படுத்தி வருவதாகவும் அதற்கு ரசிகர்கள் யாரும் ஏமாற வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.