பிரபல மாடலாக இருந்து பின்னர் ஓகே கண்மணி உள்ளிட்ட சில திரைப்படங்களில் சில கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியவர் அஸ்வின்.இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ரெட்டைவால் குருவி,நினைக்க தெரிந்த மனமே உள்ளிட்ட தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக மாறினார் அஸ்வின்.

இதனை தொடர்ந்து தற்போது விஜய் டிவியை கலக்கி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று வருகிறார்.இந்த தொடரின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவராக மாறினார் அஸ்வின்.இந்த தொடரின் மூலம் கனவுகண்ணனாக விரைவில் உருவெடுத்தார் அஸ்வின்.

இவர் குக் வித் கோமாளி சீசன் 2 போட்டியில் மூன்றாவது இடத்தை பிடித்து அசத்தினார்.இவரது குட்டி பட்டாஸ் ஆல்பம் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து trident ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் அஸ்வின் ஹீரோவாக நடிக்கிறார்.வேல்ஸ் signature தயாரிப்பில் வெளியான ஆல்பம் பாடலிலும் அஸ்வின் நடித்திருந்தார்.

இவர் நடித்துள்ள அடுத்த ஆல்பம் Loner பாடலின் ப்ரோமோ சமீபத்தில் வெளியானது.கொரோனா பாதிப்பு உலகையே  வரும் நிலையில் பலரும் கொரோனா டெஸ்ட்கள் எடுத்தும் தடுப்பூசிகள் செலுத்தியும் வருகின்றனர்.அஸ்வின் இரண்டு முறை கொரோனா டெஸ்ட் எடுத்ததாகவும் இரண்டு முறையும் நெகட்டிவ் வந்துள்ளது என்றும் ரசிகர்களை கவனமுடன் இருக்கச்சொல்லியும் அறிவுறுத்தியுள்ளார்.

cook with comali ashwin kumar tests negative for corona virus