பிரபல மாடலாக இருந்து பின்னர் ஓகே கண்மணி உள்ளிட்ட சில திரைப்படங்களில் சில கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியவர் அஸ்வின்.இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ரெட்டைவால் குருவி,நினைக்க தெரிந்த மனமே உள்ளிட்ட தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக மாறினார் அஸ்வின்.

இதனை தொடர்ந்து தற்போது விஜய் டிவியை கலக்கி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று வருகிறார்.இந்த தொடரின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவராக மாறினார் அஸ்வின்.இந்த தொடரின் மூலம் கனவுகண்ணனாக விரைவில் உருவெடுத்தார் அஸ்வின்.

இவர் குக் வித் கோமாளி சீசன் 2 போட்டியில் மூன்றாவது இடத்தை பிடித்து அசத்தினார்.இவரது குட்டி பட்டாஸ் ஆல்பம் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து trident ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் அஸ்வின் ஹீரோவாக நடிக்கிறார்.வேல்ஸ் signature தயாரிப்பில் வெளியான ஆல்பம் பாடலிலும் அஸ்வின் நடித்திருந்தார்.

இவரது பழைய புகைப்படம் ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் அடித்து வருகிறது.தமிழை தவிர தெலுங்கிலும் ஒரு சீரியலில் நடித்துள்ளார் அஸ்வின்.தெலுங்கில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி ரீமேக் ஆன ராஜா ராணி தொடரில் அஸ்வின் நடித்துள்ளார்.இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.