தமிழ் திரையுலகில் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக அறிமுகமாகி இன்று மக்கள் விரும்பும் காமெடியனாக உயர்ந்துள்ளவர் நடிகர் சதீஷ். எதிர்நீச்சல், மான் கராத்தே, தமிழ் படம், ரெமோ போன்ற படங்களில் எதார்த்தமான காமெடியை வெளிப்படுத்தியிருப்பார். தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 168 திரைப்படத்தில் சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். 

கொரோனா காரணமாக வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ள திரை பிரபலங்களில் சதீஷும் ஒருவர். படப்பிடிப்பு எங்கேயும் செல்லாமல் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் சதீஷ், நிகழ்ச்சி தொகுப்பாளினி பாவனாவுடன் லைவ்வில் தோன்றி தனது திரைப்பயணம் பற்றி உரையாடினார். அப்போது பேசியவர் சிவகார்த்திகேயனுடன் ஏற்பட்ட நட்பு பற்றியும் பகிர்ந்து கொண்டார். அட்லீ இயக்கத்தில் உருவான முகப்புத்தகம் எனும் குறும்படத்தின் போது தான் சிவகார்த்திகேயனை முதலில் சந்தித்ததாக கூறினார். முதல் நாளிலே பத்து வருடம் பழகியது போல் இருவரும் நல்ல நண்பர்களானார்களாம். அங்கிருப்பவர்களை கலாய்ப்பது என க்ளோஸ் பிரண்ட்ஸ் ஆனார்களாம். 

நம்பர் மாற்றிக்கொண்டு காதலர்கள் போல் போன், மெசேஜ் என பேசிக்கொண்டிருப்போம் என சதீஷ் கூறியுள்ளார். சிவகார்த்திகேயனின் துணைவியார் ஆர்த்தி சிவகார்த்திகேயனே சொல்லுவாங்களாம், என்கிட்ட விட உங்ககிட்ட தான் அதிக நேரம் பேசுறாரு... நான் போன் செய்தாலும், பாருங்க உங்க முதல் மனைவி போன் பன்றாங்கனு எடுத்து தருவாங்களாம். சிவகார்திகேயன் நடித்த மெரினா திரைப்படம் துவங்கி Mr.லோக்கல் வரை பல படங்களில் நடித்துள்ளார் சதீஷ். இந்த காம்போ திரையில் தோன்றினால் நகைச்சுவை மழை நிச்சயம் என்றே கூறலாம். 

சிவகார்திகேயன் அடுத்ததாக நடித்துவரும் படம் டாக்டர். SK ப்ரொடக்ஷன்ஸுடன் இணைந்து KJR நிறுவனம் தயாரிக்கிறது. நெல்சன் திலீப்குமார் இந்த படத்தை இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் ப்ரியங்கா அருள் மோகன், வினய், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில்நடிக்கின்றனர். இதுவரை இரண்டு கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளது. கொரோனா காரணமாக படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்ட நிலையில் லாக்டவுனில் எடிட்டிங் பணிகள் நடந்து வந்தது. கடைசியாக படத்தின் பிரத்தியேக புகைப்படங்கள் வெளியாகி பட்டையை கிளப்பியது. 

இதைத்தொடர்ந்து ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் படம் அயலான். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். 24AM ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. கருணாகரன், இஷா கோபிகர், பாலசரவணன் ஆகியோர் உள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இப்படத்தின் CG பணிகள் ஒருபக்கம் இருக்க, படப்பிடிப்பும் மீதம் உள்ளது போல் தெரிகிறது.