தமிழ் சினிமாவின் கிளாஸ் இயக்குனர் என்றால் உடனே நினைவுக்கு வருபவர் கௌதம் வாசுதேவ் மேனன். கொஞ்சம் காஃபி - கொஞ்சும் ஆங்கிலம், புத்தகம், கிட்டார், அழகான குடும்பம், அன்பான வார்த்தைகள், அண்ணா நகர் நண்பர்கள், லாஜிக்கான ஹீரோயிசம், உணர்வுபூர்வ உரையாடல் மற்றும் ஸ்டஃப்ஸ் இவையனைத்தும் ஓர் படத்தில் கொண்டு வர கௌதம் மேனனால் மட்டுமே முடியும் என்பதை தன் ஒவ்வொரு படங்களின் மூலம் நிரூபிப்பவர். 

Classy Director Gautham Vasudev Menon Celebrates His Fourty Sixth Birthday Today

காப் அணிந்த நாயகர்களும், காவியம் போல் திகழும் நாயகிகளும் இவர் படத்தில் மட்டுமே சாத்தியம். சினிமா துறை சார்ந்த படிப்பு படித்தால் மட்டுமே இயக்குனர் ஆக முடியும் என்ற ஃபார்முலாவை உடைத்தெரிந்த பெருமை கெளதம் மேனனையே சேரும். இவரை இன்ஸ்பிரஷனாக வைத்து சினிமா துறையில் நுழைந்த பொறியியல் மாணவர்கள் ஏராளம்.

Classy Director Gautham Vasudev Menon Celebrates His Fourty Sixth Birthday Today

மின்னலாக வரும் இவரது படைப்புகள் பார்ப்போரின் மனதை வேட்டையாடி விளையாடி செல்லும். தந்தை மகன் பாசத்தை போற்றும் ஆயிரம் படங்கள் வந்தாலும் இவரது வாரணம் ஆயிரம் படமே என்றும் தனித்து காணப்படும். காதலுக்காக மண்ணை தாண்டி வருவது போன்ற படங்கள் வெளியான நேரத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா எனும் காலத்தால் அழியாத கல்வெட்டை தந்தவர் கெளதம் மேனன்.

Classy Director Gautham Vasudev Menon Celebrates His Fourty Sixth Birthday Today

இயக்குனர், நடிகர், பாடகர், வசனகர்த்தா, நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகத்திறமை கொண்ட சினிமா காதலன் கௌதம் வாசுதேவ் மேனனின் 46-வது பிறந்தநாளை, ரசிகர்களோடு கொண்டாடுவதில் பெருமை கொள்கிறது நம் கலாட்டா.

Classy Director Gautham Vasudev Menon Celebrates His Fourty Sixth Birthday Today