பிகில் நடிகையின் புதிய பட டீஸர் குறித்த தகவல் !
By Aravind Selvam | Galatta | November 05, 2019 18:46 PM IST

தளபதி விஜயின் பிகில் திரைப்படம் தீபாவளியையொட்டி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ஓடி வருகிறது.அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார்.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்துஜா,வர்ஷா போல்லம்மா,அமிர்தா ஐயர்,ரெபா மோனிகா ஜான் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.தற்போது வர்ஷா பொல்லம்மா ஹீரோயினாக நடித்துள்ள தெலுங்கு படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.
ChoosiChoodangaane என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் டீஸர் நாளை காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.