இந்திய திரையுலகில் பாத்திரத்திற்கு ஏற்றவாறு தன்னை வருத்திக்கொண்டு நடிப்பவர் சியான் விக்ரம். கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய இரண்டு படங்களில் கவனம் செலுத்தி வரும் சியான் விக்ரம் அடுத்ததாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் சியான் 60 படத்தில் இணையவுள்ளார். சியான் விக்ரமுடன் முதல் முறையாக துருவ் விக்ரமும் இணைந்து நடிக்கவுள்ளார். படத்திற்கு படம் வித்தியாசம் தரும் கார்த்திக் சுப்பராஜ், இதிலும் தனது மாறுபட்ட ஜானரில் விருந்தளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை லலித் குமார் தயாரிக்கிறார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பட்டையை கிளப்பியது. படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளில் இறங்கியுள்ள கார்த்திக் சுப்பராஜ், லாக்டவுன் முடிந்து இயல்பு நிலை திரும்பிய பிறகே படப்பிடிப்பு பணிகளில் இறங்குவார் என தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் ஜகமே தந்திரம் படத்தின் ரிலீஸும் உள்ளது. 

தற்போது சுவையூட்டும் செய்தி ஒன்று கிடைத்துள்ளது. சியான் விக்ரம் விரைவில் தாத்தா ஆகப் போகிறாராம். இச்செய்தி அறிந்த ரசிகர்கள், இணையத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சியான் விக்ரம் மகள் அக்ஷிதாவுக்கும், மறைந்த திமுக முன்னாள் தலைவர் மு. கருணாநிதியின் மகன் மு.க.முத்துவின் பேரன் மனு ரஞ்சித்துக்கும் கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ம் தேதி கருணாநிதி தலைமையில் கோபாலபுரம் இல்லத்தில் நடந்தது.

இந்நிலையில் அக்ஷிதா கர்ப்பமாக இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பிரச்சனையாக இருப்பதால் இரு வீட்டார் மட்டும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்களாம். அக்ஷிதாவின் நிச்சயதார்த்தம், திருமணம் ஆகியவற்றிலும் இரு வீட்டாரும், நெருங்கிய நண்பர்கள் ஒரு சிலர் மட்டுமே கலந்து கொண்டனர். இந்நிலையில் வளைகாப்பு நிகழ்ச்சியும் அப்படித் தான் நடக்கவிருக்கிறது என்று சியான் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். 

கொரோனா வைரஸ் பிரச்சனையால் சியான் விக்ரம் கலந்துகொள்ளவிருக்கும் படங்களின் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் விக்ரம் தற்போது தன் குடும்பத்துடன் வீட்டில் நேரத்தை செலவு செய்து வருகிறார். 

கோப்ரா படத்தின் தும்பி துள்ளல் பாடல் கடைசியாக வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தளித்தது. அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ இந்த படத்தை தயாரித்துள்ளது. ஸ்ரீநிதி ஷெட்டி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். ஆனந்த ராஜ்,ரோபோ ஷங்கர், மியா ஜார்ஜ்,மிர்னாலினி ரவி,பூவையார்,கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.