சீயான் விக்ரம்-துருவ் விக்ரமின் மகான் முதல் பாடல் ரிலீஸ் தேதி இதோ !
By Aravind Selvam | Galatta | September 20, 2021 13:23 PM IST
கடாரம் கொண்டான் படத்தின் ரிலீஸை அடுத்து சீயான் விக்ரம் மகான்,பொன்னியின் செல்வன்,கோப்ரா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.இந்த மூன்று படங்களின் ஷூட்டிங்கையுமே சமீபத்தில் நிறைவு செய்தார் சீயான் விக்ரம்.
மகான் படத்தினை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்.இந்த படத்தில் இவருடன் இணைந்து இவரது மகன் துருவ் விக்ரமும் நடிக்கிறார்.இந்த படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்கின்றனர்.இந்த படத்தின் அறிவிப்பின் முதலே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.இந்த படத்தில் சிம்ரன்,பாபி சிம்ஹா,வாணி போஜன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில்நடித்துள்ளனர்.இந்த படத்தில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரமின் பர்ஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.தற்போது இந்த படத்தின் முதல் பாடல் வரும் 22ஆம் தேதி வெளியிடப்படும் என்ற அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.சூறையாட்டம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பாடல் ரிலீஸை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
🥁🥁🥁#MahaanFirstSingle, #Soorayaatam from 22.09.2021 🔥🔥🔥
— Seven Screen Studio (@7screenstudio) September 20, 2021
A @Music_Santhosh musical! 🎼#ChiyaanVikram #DhruvVikram @karthiksubbaraj @SonyMusicSouth @proyuvraaj #Mahaan 🔥 pic.twitter.com/bM2BhllVR9
Bigg Boss Tamil Season 5 Launch Date Official Announcement Promo | Kamal Haasan
20/09/2021 06:30 PM
Arun Vijay's next mass action film BORRDER release date - Official Announcement!
20/09/2021 04:30 PM
WOW: Yogi Babu joins RJ Balaji's next laugh riot family comedy film - Check out!
20/09/2021 03:35 PM