கடாரம் கொண்டான் படத்தின் ரிலீஸை தொடர்ந்து சீயான் விக்ரம் நடிக்கவிருக்கும் படம் விக்ரம் 58.டிமான்டி காலனி,இமைக்கா நொடிகள் உள்ளிட்ட படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இந்த படத்தை இயக்குகிறார்.இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

Chiyaan Vikram Cobra Might Release On May 21

Viacom 18 மோஷன் பிக்சர்ஸ் மற்றும் Seven screen ஸ்டுடியோ இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர்.
பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.ஸ்ரீநிதி ஷெட்டி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

Chiyaan Vikram Cobra Might Release On May 21

இந்த படத்திற்கு கோப்ரா என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.இந்த படத்தின் அடுத்தகட்ட ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது.இந்த படம் தற்போது மே 21 ரம்ஜானையொட்டி இந்த படம் வெளியாகவுள்ளது என்று தகவல் கிடைத்துள்ளது.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Chiyaan Vikram Cobra Might Release On May 21