சென்னையில் மூளையைத் தனியாக எடுத்து இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர்.

சென்னை திருவல்லிக்கேணி கெனால் தெருவில் வசித்து வந்த 25 வயதான ஹரிகிருஷ்ணனை, நள்ளிரவில் வீடு புகுந்த அடையாளம் தெரியாத நர்ம நபர்கள் சிலர், கொடூரமாகக் கொலை செய்துவிட்டுத் தப்பி ஓடியுள்ளனர்.

youth murder

அதில், ஹரிகிருஷ்ணனின் தலை, கை, கால் ஆகியவற்றைத் தனித் தனியாக வெட்டி கொன்றுள்ளனர். அத்துடன் கொலை வெறியின் உச்சமாக, ஹரிகிருஷ்ணனின் தலையை இரண்டாகப் பிளந்து, மூளையைத் தனியாக எடுத்து, அங்கிருந்த ஒரு தட்டில் தனியாக வைத்துவிட்டு, கொலையாளிகள் அங்கிருந்து சென்றுள்ளனர்.

youth murder

காலையில் அக்கம் பக்கத்தில் அளித்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார், இந்த கொடூரமான கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

youth murder

மேலும், கொலை செய்யப்பட்ட ஹரிகிருஷ்ணன், வழிப்பறி மற்றும் திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்டவர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். 

இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, குமார் என்பவரை ஹரிகிருஷ்ணனை வெட்டியதாகவும், இதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக ஹரிகிருஷ்ணன் தற்போது கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.