சென்னையில் 8 வது மாடியிலிருந்து விழுந்து ஐடி பெண் ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை அம்பத்தூரில் செயல்பட்டு வரும் தனியார் ஐடி நிறுவனத்தில் திருச்சி அமலாபுரியைச் சேர்ந்த 24 வயதான டேனிடா ஜூலியஸ் என்ற பெண், கடந்த 18 ஆம் தேதி புதிதாக வேலைக்குச் சேர்ந்துள்ளார். 

IT woman falls

11 மாடி கட்டடம் கொண்ட அந்த நிறுவனத்தில் டேனிடா ஜூலியஸ், 8 வது மாடியில் பணியாற்றி உள்ளார். இந்நிலையில், இரவில் பணியை முடித்துவிட்டு, வீட்டிற்குப் புறப்பட்ட அவர், லிப்ட் வழியாகச் செல்லாமல், படிக்கட்டு வழியாகச் சென்றுள்ளதாகத் தெரிகிறது. 

அப்போது நிலைதடுமாறி, 8 வது மாடியிலிருந்து அவர் தவறி கீழே விழுந்துள்ளார். விழுந்த வேகத்தில் ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து விரைந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், 8 வது மாடியிலிருந்து, அந்த இளம் பெண் ஏன் படிக்கட்டுக்கள் வழியாக நடந்துசெல்ல வேண்டும் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணத்திலும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

IT woman falls

இதனிடையே, அப்பத்தூரில் ஐடி பெண் 8வது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளது சம்பவம், சக ஐடி ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.