ஒரே நேரத்தில் இரண்டு பெண்களைக் காதலித்ததால் திருமணமான 7வது நாளில் இளம் பெண் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சென்னை திரிசூலம் பகுதியைச் சேர்ந்த டிரைவரான அன்பின்ராஜ்வும், அதே பகுதியைச் சேர்ந்த இன்ஜினியரிங் மாணவியான மனிஷாவும் கடந்த 5 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்புத் தெரிவித்ததால், திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு இருவரும் வீட்டை விட்டு வெளியேறினார்கள்.

girl suicide after marriage

இதனையடுத்து, அன்பின்ராஜீ உறவினர் வீட்டில் இருவரும் தஞ்சம் அடைந்த நிலையில், இருவரும் தாலி கட்டிக்கொள்ளாமலேயே குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இதில், மனிஷா கருவுற்றார். இந்த தகவல் அன்பின்ராஜ் உறவினருக்குத் தெரிய வர, இதனால் தனக்குப் பிரச்சனை வந்துவிடுமோ என்ற பயத்தில், அவர் இருவரையும் வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டார்.

இதனைத்தொடர்ந்து, தனக்குத் தாலி காட்டச் சொல்லி மனிஷா, அன்பின்ராஜை வற்புறுத்த, அவரும் வேறு வழியில்லாமல் தாலி கட்டுகிறார். இருவரும் ஒன்றாக வாழத் தொடங்குகிறார்கள். இந்நிலையில், இருவருக்கும் திருமணம் ஆன 7 வது நாளில் மனிஷா தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டதாக, அன்பின்ராஜ் மனிஷாவின் பெற்றோருக்கு போன் மூலம் தகவல் தெரிவிக்கிறார். இதனால், அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் ஓடிவந்து மனிஷாவின் உடலைப் பார்க்கிறார்கள்.

அப்போது, அவரது கழுத்து மற்றும் கால் பகுதியில் காயங்கள் இருப்பது தெரியவருகிறது. மேலும், அன்பின்ராஜின் நடவடிக்கையில் சந்தேகப்பட்ட அவர்கள், மனிஷாவின் செல்போனை ஆய்வு செய்கிறார்கள். அதில், அன்பின்ராஜீவுக்கும், அனிதாவுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வருகிறது. அனிதாவிடம், தாலி பிச்சை கேட்டு, தன் கணவனை தன்னிடமே விட்டு விடும்படி மனிஷா கெஞ்சும் தொலைப்பேசி உரையாடல்கள் எல்லாம் அதில் தெரிய வருகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த மனிஷாவின் பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில், அன்பின்ராஜை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த விசாரணையின் முடிவிலேயே மனிஷா தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது அவர் கொலை செய்யப்பட்டரா என்பது தெரிய வரும். கொலையோ? தற்கொலையோ? மனிஷா தற்போது உயிரோடு இல்லை. எது எப்படியிருந்தாலும், அன்பின்ராஜீ ஒரே நேரத்தில் 2 பெண்களைக் காதலித்ததால் தான், திருமணமான 7வது நாளில் இளம் பெண் மனிஷா தற்போது உயிரற்ற நிலையில் உறங்குகிறாள்.