வெண்ணிலா கபடிக் குழு திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சுசீந்திரன். சமீபத்தில் இவரது இயக்கத்தில் கென்னடி கிளப் திரைப்படம் வெளியானது. தற்போது கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து சாம்பியன் என்ற படத்தை இயக்கியுள்ளார். நேற்று வெளியான இப்படம் சிறந்த வரவேற்பை பெற்றது. 

champion

அறிமுக நடிகர் விஷ்வா கதாநாயகனாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக டிக் டாக் பிரபலம் மிருநாளினி ரவி மற்றும் சவுமியா நடித்திருக்கின்றனர். இவர்களுடன் இணைந்து அஞ்சாதே நரேன், ராமன் விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அரோல் கரோலி இசை அமைத்துள்ளார். சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

naren

தற்போது இந்த படம் உருவான விதம் குறித்து நடிகர்கள் நரேன், மனோஜ் மற்றும் இசையமைப்பாளர் அரோல் கரோலி கலாட்டா நேர்காணலில் பகிர்ந்துள்ளனர்.