சமீபத்தில் ஒளிபரப்பட்ட தமிழ் நிகழ்ச்சிகளில் மக்களின் மனம் கவர்ந்த ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ்.இரண்டு சீசனும் பெரிய வெற்றியை பெற்றதோடு நல்ல TRPயையும் பெற்றது.இந்த இரண்டு சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.கமல்ஹாசனின் அரசியல் வசனங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

இரண்டு சீசனில் பங்குபெற்ற போட்டியாளர்களும் மக்கள் மத்தியில் நல்ல பிரபலமாகி விட்டனர்.முதல் இரண்டு சீசன்களை அடுத்து மூன்றாவது சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.இந்த சீசன் கடந்த 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் confession ரூம் குறித்து கஸ்தூரி இங்கிருக்கும் யாருக்கும் தெரியவில்லை என்று கூறுகிறார்.இதனை அடுத்து காலர் மதுமிதாவிடம் வீட்டிற்குள் வந்தபோது தைரியமாக இருந்தீர்கள் இப்போது நடிப்பது போல தெரிகிறது என்று கேட்கிறார்.