பிரபல டான்ஸ் கோரியோகிராபராக திகழ்பவர் பிருந்தா மாஸ்டர். 90 காலகட்டத்தில் இருந்து தற்போது வரை பல முன்னணி நடிகர் நடிகைகளின் படங்களில் கோரியோகிராபராக பல புரிந்து இருக்கிறார். படங்களில் உதவி டான்ஸ் மாஸ்டராக வேலை பார்த்து இருந்த இவருக்கு சுந்தர் சி-ன் உள்ளத்தை அள்ளித்தா படத்தின் மூலம் தான் டான்ஸ் மாஸ்டராக பணிபுரியும் வாய்ப்பு எட்டியது. 

அதற்கு பிறகு இவர் பல வெற்றி படங்களில் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்தார். இவர்களுடைய குடும்பமே நடனக் கலையில் கை தேர்ந்தவர்கள். 1995-ம் ஆண்டு உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான நம்மவர் படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் பிருந்தா தனது ட்விட்டர் பக்கத்தில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான நானும் ரவுடிதான் படத்தின் பாடல்களில் பணிபுரிந்தது பற்றி குறிப்பிட்டுள்ளார். 

அதில் பணிவு மிகுந்த விஜய் சேதுபதியுடன் பணியாற்றிய நானும் ரவுடிதான் அனுபவம் சிறந்தது. அவர் நேச்சுரல் நடிகர், அற்புதமான கலைஞர். நயன்தாராவின் நடிப்பு அட்டகாசமாக இருந்தது. இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு நன்றி. அனிருத்தின் அழகான பாடல். நினைவில் நீடித்திருக்கும் பணி அனுபவம் என்று பாராட்டி ட்வீட் செய்துள்ளார். பிருந்தா மாஸ்டர் சொல்வது போல், விஜய்சேதுபதியின் நடிப்பு இந்த படத்தில் இயல்பாக இருக்கும். எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். RJ பாலாஜியின் காமெடியும் படத்திற்கு பக்கபலமாக இருந்திருக்கும். 

இதற்கு பதிலளித்த விக்னேஷ் சிவன், உங்களுடன் பணிபுரிவது அமேசிங் மேம். எங்களை வேகமாக ஓட வைப்பீர்கள். இன்னும் பல அருமையான பாடல்கள் உங்களுடன் சேர்ந்து தர விரும்புகிறோம் என்று மனதார கூறியுள்ளார் விக்கி. 

விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் மாஸ்டர். அந்த படத்தில் தளபதி விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளார். ஹீரோ ரோலில் நடித்தாலும், சேதுவின் வில்லத்தனத்திற்கென ரசிகர் பட்டாளம் உண்டு. 

நடன இயக்குனராக இருக்கும் பிருந்தா இயக்குனராக களமிறங்கவுள்ள திரைப்படம் ஹே சினாமிகா. துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்கவிருக்கும் இந்த படத்தில் காஜல் அகர்வால் மற்றும் அதிதி ராவ் ஹைதாரி முக்கிய ரோலில் நடிக்கவுள்ளனர். கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார். வானம் கொட்டட்டும் படத்தில் தனது ஒளிப்பதிவு மூலம் ஈர்த்த ப்ரீதா ஜெயராம் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

இன்று துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து கூறி பதிவை செய்துள்ளார். பிருந்தா திரைப்பயணத்தில் இந்த ஹே சினாமிகா திரைப்படம் முக்கிய திருப்பமாக இருக்கும் என்று கூறலாம்.