விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம் ஆகஸ்ட் 8ஆம் தேதி திரைக்கு வர தயாராகவுள்ளது.இந்த படத்தை சதுரங்க வேட்டை,தீரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய வினோத் இயக்கியுள்ளார்.

போனி கபூர் இந்த படத்தை தயாரித்துள்ளார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாகவுள்ள தல 60 படத்தையும் வினோத் இயக்க,போனி கபூர் தயாரிக்கிறார்.நேர்கொண்ட பார்வை படத்தின் சிறப்பு காட்சி இன்று சிங்கப்பூரில் நடைபெற்றது.இதில் தயாரிப்பாளர் போனி கபூர்,ஹீரோயின்கள் வித்யா பாலன் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் கலந்துகொண்டனர்.

ரசிகர் ஒருவர் அடுத்த படம் எப்போது தொடங்கும் என்று கேட்டதற்கு தல 60 படத்தின் பூஜை ஆகஸ்ட் 29ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவித்தார்.இது ஒரு ஆக்ஷன் திரில்லர் படமாக இருக்கும் என்றும் இசையமைப்பாளர் மற்றும் பிற நடிகர்கள் குறித்த தகவல் நேர்கொண்ட பார்வை ரிலீசுக்கு பிறகு வெளியாகும் என்றும் தெரிவித்தார்.