தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய்.இவரது நடிப்பில் அட்லீ இயக்கத்தில் கடந்த தீபாவளிக்கு வெளியான பிகில் திரைப்படம் வசூல் சாதனை புரிந்து அந்த ஆண்டின் பெரிய லாபம் ஈட்டிய படம் என்ற பெருமையை பெற்றது.இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.கொரோனா காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.

கொரோனா பாதிப்பு குறைந்து திரையரங்குகள் சகஜ நிலைக்கு திருப்பியதும் மாஸ்டர் படத்தினை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.கொரோனா தடுப்பு பணிகளில் விஜய் ரசிகர்கள் தொடக்கத்தில் இருந்து தங்கள் பங்கை சிறப்பாக செய்து வருகின்றனர்.சமீபத்தில் முடிந்த இவரது பிறந்தநாளுக்கும் விஜய் ரசிகர்கள் தங்களால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்திருந்தனர்.

நேற்று நள்ளிரவு காவல்துறை கட்டுப்பாடு அறையை தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர் ஒருவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார்.இதனையடுத்து காவல்துறையினர் விஜயின் சாலிகிராமம் வீட்டிற்கும் அவர் தற்போது வசித்து வரும் நீலாங்கரை வீட்டிற்கும் விரைந்து சோதனைகள் மேற்கொண்டனர்.சோதனையை தொடர்ந்து இந்த செய்தி வெறும் வதந்தி தான் என்பது தெரியவந்துள்ளது.

விஜயின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.விசாரணையில் மனநலம் குன்றிய இளைஞர் ஒருவர் இந்த செயலை செய்துள்ளார் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது என்ற தகவலும் கிடைத்துள்ளது.சில நாட்களுக்கு முன் ரஜினிகாந்தின் வீட்டிற்கும் இதே போல ஒரு மனநலம் குன்றிய நபர் வெடிக்குண்டு மிரட்டல் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.