பாலியல் வழக்கில் பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்தா கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டக் கல்லூரி மாணவி அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான் பூரில் உள்ள எஸ்.எஸ். சட்டக் கல்லூரியில் படிக்கும் மாணவி, கடந்த மாதம் பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்தாவுக்கு எதிராக பாலியல் குற்றம் சாட்டி, வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

Chinmayanda

இதனையடுத்து, மாயமான மாணவி, பின்னர் ராஜஸ்தானிலிருந்து மீட்கப்பட்டு உச்சநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது.

Chinmayanda case

அப்போது, பாதிக்கப்பட்ட மாணவி தரப்பில் 43 வீடியோக்கள் சிறப்பு விசாரணை குழுவிடம் அளிக்கப்பட்டது.

Chinmayanda case

பின்னர், சின்மயானந்தா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 7 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. இதனையடுத்து, இன்று அவர் கைது செய்யப்பட்டார்.