பாஜக முன்னாள் அமைச்சர் சின்மயானந்தாவுக்கு எதிராகச் சட்டக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான் பூரில் உள்ள எஸ்.எஸ். சட்டக் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர், கடந்த மாதம் தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் சின்மயானந்தாவுக்கு எதிராக பாலியல் குற்றம் சாட்டி, வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

sexual harassment case

அதில், முன்னாள் மத்திய இணை அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான சின்மயானந்தாவு, தன்னை கடந்த ஒரு வடங்களாக பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தன்னை துன்புறுத்தியாதாகவும் பேசி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். மேலும், இதேபோல், பல பெண்களின் வாழ்க்கையை அவர் நாசம் செய்து வருவதாகவும் குற்றம்சாட்டினார். இது தொடர்பான அனைத்து ஆதாரங்களும் தன்னிடம் இருப்பதாகவும், தேவையான நேரத்தில் அனைத்தும் வெளியிடுவேன் என்றும் தெரிவித்தார். இதனையடுத்து மாயமான மாணவி, ராஜஸ்தானிலிருந்து மீட்கப்பட்டு உச்சநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

sexual harassment case

அப்போது, வீடியோ வெளியிட்டது தொடர்பாக மாணவி, நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தார். தற்போது தன்னையும் கொலை செய்ய முயற்சிக்கிறார் என்றும், தனது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அவர் கூறினார். அத்துடன், கல்லூரி விடுதியில் தான் தங்கியிருந்த அறை தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த அறை மீடியா முன்பாக திறக்கப்பட வேண்டும் என்றும் என்றும் மாணவி வாக்கு மூலம் அளித்தார்.

Chinmayanand

மேலும், பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில்,சின்மயானந்தா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே, மாணவி 5 கோடி ரூபாய் கேட்டு மிரட்டுவதாக சின்மயானந்தாவின் வழக்கறிஞர் குற்றச்சாட்டிருந்தார். இது குறித்துப் பேசிய மாணவி, அது பொய்யான குற்றச்சாட்டு என்றும், இது குறித்தும் அவர்களிடம் விசாரிக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மாணவி வலியுறுத்தினார்.