ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் தீபாவளி விருந்தாய் வெளியாகியுள்ள படம் பிகில். இந்தப் படத்தை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். விமர்சன ரீதியாகக் கலவையாகவே உள்ளது.

bigil

இதனைத் தொடர்ந்து பிகில் படக்குழுவினருக்கு பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரிலீஸான மூன்று நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 100 கோடி வசூலித்தது.

bigil

தற்போது ஜார்டன் நாட்டில் திரைக்கு வரும் முதல் தமிழ் படம் என்ற அங்கீகாரத்தை பெற்றது பிகில். வரும் நவம்பர் 15 மற்றும் 16-ம் தேதிகளில் திரையிடப்படும் என்பது தெரியவந்தது. ஏற்கனவே எகிப்து நாட்டில் வெளியான முதல் தமிழ் படம் என்ற பெருமையையும் பிகில் பெற்றுள்ளது.