தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் மூன்றாவது முறையாக இயக்குனர் அட்லீயுடன் இணைந்துள்ள படம் பிகில்.இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

Bigil Reba Monica John Thanks Tamil People Twitter

ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படம் தீபாவளியையொட்டி கடந்த 25ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Bigil Reba Monica John Thanks Tamil People Twitter

இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ள ரெபா மோனிகா ஜான் தற்போது ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.தன்னுடைய அனிதா கதாபாத்திரத்துக்கு தமிழ் மக்கள் தந்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ளார் தொடர்ந்து நல்ல படங்களில் நடிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார்.