விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகி கடந்த தீபாவளிக்கு வெளியான திரைப்படம் பிகில்.ஏ.ஜி.எஸ் என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தனர்.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.

பெண்கள் கால்பந்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் கதிர்,நயன்தாரா,விவேக்,யோகி பாபு,இந்துஜா,அமிர்தா ஐயர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்த இந்த படம் 300 கோடிகளை வசூல் செய்து கடந்த வருடத்தின் அதிகம் வசூல் செய்த படம் என்ற பெருமையை பெற்றிருந்தது.ஏ.ஜி.எஸ் நிறுவனம் திரைப்படங்களை தயாரிப்பதை தவிர்த்து சென்னையில் திரையரங்கங்களையும் வெற்றிகரமாக நடத்தி வந்தனர்.கொரோனா காரணமாக போடப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக கடந்த 4 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.திரையரங்குகள் மட்டுமின்றி மொத்த உலகமுமே தடைபட்டுள்ளது.

பலர் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர்.பலர் தங்கள் சேமிப்புகளை இழந்துள்ளனர்.இந்த ஊரடங்கு நேரத்தில் பலரும் வேலைகளை இழந்து,தொழில்களை இழந்துள்ளனர்.இருந்தாலும் கொரோனாவின் பாதிப்பு தமிழகத்தில் குறைந்த வண்ணம் இல்லை.

இது குறித்து தற்போது அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.அதில் அவர் கூறியுள்ளதாவது , வாழ்க்கையா ? வாழ்வாதாரமா என்று முடிவெடுப்பது மிகவும் கடினமான ஒரு விஷயம்,நமக்கு நெருக்கமானவர்களை பாதுகாப்பதா அல்லது அவர்களுக்கு தேவையானதை வழங்குவதா என்று தேர்ந்தேடுப்பதும் கடினமான தேர்வு தான்.இந்த கஷ்டமான சூழ்நிலையில் இருந்து நாம் அனைவரும் விரைவில் மீளவேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்.இதன் எதார்த்தம் என்னவென்றால் இந்த லாக்டவுன் ஒரு கட்டத்தில் நிறைவடைந்து தான் ஆகவேண்டும் , நாம் அனைவரும் வீட்டிலேயே இருக்க முடியாது. சமூக இடைவேளை,மாஸ்க் உள்ளிட்டவற்றை பின்பற்றி நமது அன்றாட பணிகளை செய்து நாம் இந்த கொரோனாவுடன் வாழ பழகி கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்