பிக்பாஸ் சீசன் 3 தொடரின் மூலம் ரசிகர்களின் உள்ளங்களில் இடம்பிடித்தவர் கவின்.சத்ரியன்,நட்புனா என்னன்னு தெரியுமா உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார்.இதனை தொடர்ந்து Ekaa எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் கவின் ஹீரோவாக நடிக்கிறார்.

பிகில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த அமிர்தா ஐயர் இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிக்கிறார்.வினீத் வரப்ரஸாத் இந்த படத்தை இயக்குகிறார்.பிரிட்டோ மைக்கேல் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்திற்கு லிப்ட் என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.இன்று படத்தின் நாயகன் கவினின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த மாதம், இந்த படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டனர்.இந்த வீடியோவும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் பிகில் படத்தில் நடித்த காயத்ரி ரெட்டி நடிக்கவுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.நேற்று தனது இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்களுடன் பேசி வந்த காயத்ரி ரெட்டி இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.அமிர்த்தா ஐயர் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் காயத்ரி ரெட்டி.இருவரும் இணைந்து பிகில் படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் இவரது கேரக்டர் குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்,அதற்கு அது பெரும் ரகசியம் சொல்லமாட்டேன் என்று எஸ்கேப் ஆகி விட்டார்.படத்தின் இயக்குனர் குறித்து பேசிய காயத்ரி ரெட்டி அவருடன் பணியாற்றியது மறக்கமுடியாத அனுபவம் என்று தெரிவித்தார்.கவின் குறித்த கேள்விக்கு பதிலளித்த காயத்ரி ரெட்டி, கவின் நல்ல உள்ளம் கொண்ட ஒரு மனிதர் என்று தெரிவித்துள்ளார்.இந்த படத்தின் அப்டேட்டை எதிர்பார்த்து காத்திருந்த கவின் ரசிகர்கள் உற்சாகமாக இதனை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.