மலையாள படங்கள் மூலம் நடிகையானவர் ரெபா மோனிகா ஜான். ஜெய்யின் ஜருகண்டி படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்த அவருக்கு அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த பிகில் படம் மூலம் தான் பெயரும், புகழும் கிடைத்தது.

ரெபா தற்போது துபாயில் இருக்கிறார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் ரெபாவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு நடந்த பர்த்டே பார்ட்டியில் ரெபாவுக்கு அவரின் காதலரான ஜோமோன் ப்ரொபோஸ் செய்ய அவர் ஏற்றுக் கொண்டார். ஜோமோன் ப்ரொபோஸ் செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. 

ரெபாவிடம் ப்ரொபோஸ் செய்ததை ஜோமோன் தான் சமூக வலைதளம் மூலம் அறிவித்தார். லாக்டவுனால் ஆறு மாதங்களாக ரெபாவை பார்க்காமல் இருந்திருக்கிறார் ஜோமோன். அப்பொழுது தான் அவருக்கு ரெபாவை எவ்வளவு மிஸ் பண்ணுகிறோம் என்பது தெரிந்துள்ளது. இதையடுத்து ரெபாவை சந்தித்த உடன் அவருக்கு ப்ரொபோஸ் செய்துவிட்டார்.

மேலும் தான் ரெபாவுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் ஜோமோன். ஜோமோனுடன் துபாயின் பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளார் ரெபா. அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார். ரெபாவுக்கு விரைவில் திருமணம் என்கிற தகவல் அறிந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ரெபா, ஜோமோன் ஜோடி சூப்பர் என்று பிகில் புகழ் வர்ஷா பொல்லம்மா, ரைசா வில்சன் ஆகியோர் இன்ஸ்டாகிராமில் கமெண்ட் செய்து வாழ்த்து வருகின்றனர். 

ரெபா கைவசம் எஃப்.ஐ.ஆர் திரைப்படம் உள்ளது. மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய மூவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். கருணாகரன் மற்றும் இயக்குனர் கெளதம் மேனன் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.