அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் தயாராகி வரும் படம் பிகில்.ஏ.ஜி.எஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.நயன்தாரா,கதிர்.இந்துஜா,யோகிபாபு,விவேக் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

Bigil Audio Launch Thalapathy Vijay Speech

ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா தற்போது நடைபெற்று வருகிறது.இந்த இசை வெளியீட்டு விழாவில் முக்கிய படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டுள்ளனர்.

Bigil Audio Launch Thalapathy Vijay Speech

நிகழ்ச்சியில் பேசிய படத்தின் நாயகன் விஜய்.தனக்கே உரிய பாணியில் பேச்சை தொடங்கிய விஜய் யாரும் சற்றும் எதிர்பாராத விதமாக வெறித்தனம் பாடலை பாடி அதற்கு ஏத்தது போல் ஒரு ஸ்டெப்பையும் போட்டு அசத்தியுள்ளார்.

Bigil Audio Launch Thalapathy Vijay Speech

பின்னர் பேசிய விஜய் இந்த படத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சி என்று தெரிவித்தார்.படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்த விஜய் நமது வாழ்க்கையும் ஒரு கால்பந்து ஆட்டத்தை போலத்தான் அதனை கவனமாக ஆட வேண்டும் என்று தெரிவித்தார். அவர்களை போல் ஆகவேண்டும் என்று எதிர்பார்க்காமல் நாம் ஒரு இலக்கை வைக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

Bigil Audio Launch Thalapathy Vijay Speech

சமீபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொண்டார்.தொடர்ந்து பேசிய விஜய் இந்த விவகாரத்தில் யாரை கைது செய்யவேண்டும் என்பது குறித்து ரசிகர்கள் ட்விட்டரில் பேசவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.யாரை எங்கு உட்காரவைக்கவேண்டுமோ அங்கே வையுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

Bigil Audio Launch Thalapathy Vijay Speech

சர்கார் படத்தின் போது நடந்த சமத்துவத்தை நினைவுகூறிய விஜய் ரசிகர்களை எதுவும் செய்யவேண்டாம் என் போஸ்டர் பேனர்களை என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள் என்று தெரிவித்தார்.தன்னுடைய வழக்கமான குட்டிக்கதையுடன் உரையை முடித்துக்கொண்டார் விஜய்.

Bigil Audio Launch Thalapathy Vijay Speech