பிகில் இசை வெளியீட்டு விழா குறித்த அதிரகாரப்பூர்வ அறிவிப்பு இதோ
By Sakthi Priyan | Galatta | September 15, 2019 17:12 PM IST

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் பிகில். இப்படத்தில் இடம்பெற்றுள்ள சிங்கப்பெண்ணே, வெறித்தனம் ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று பட்டையை கிளப்பி வருகிறது. இப்படத்தின் இசை வெளியீடு எப்போது என்று ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருந்த நிலையில், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி.
ஒவ்வொரு ஆண்டும் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளவும், தளபதி விஜய்யின் பேச்சைக் கேட்பதற்காகவும் காத்திருக்கின்றனர்.வரும் செப்டம்பர் 19-ம் தேதி பிகில் இசை வெளியீடு சிறப்பாக இருக்கும் என்று புது போஸ்டருடன் பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் பிகில் இசை வெளியீடு நடைபெற இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இசை வெளியீட்டைத் தொடர்ந்து பிகில் படத்தின் டீசர் அல்லது டிரைலர் குறித்த அப்டேட் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.