தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் என்பதை தாண்டி எப்போதும் ரசிகர்களை மதிக்கும் ஒரு நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான்.தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் பிகில் படத்தில் நடித்து வருகிறார்.

Thalapathy Vijay Bigil

இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

Bigil Fanmade

கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வரும் இந்த படத்தின் Firstlook போஸ்டர் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தில் விஜய் ஒரு பாடலை பாடியுள்ளார் என்ற தகவலை படக்குழுவினர் வெளியிட்டனர்.

Bigil Fanmade Image

இந்த படத்தின் முதல் பாடலான சிங்கப்பெண்ணே வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படத்தில் தன்னுடைய ஷூட்டிங் பணிகளை நேற்றுடன் முடித்துள்ளார் தளபதி விஜய்.

Thalapathy Vijay Michael

இதனையடுத்து படத்தின் தற்போதைய நிலை குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஒரு பதிவிட்டுள்ளார்.படப்பிடிப்பு 95 சதவீதம் நிறைவடைந்துவிட்டது என்றும், டப்பிங் மற்றும் போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.இதுவரை அப்டேட் விடமால் இருந்ததற்கு வருத்தம் தெரிவித்த அவர் இனி அப்டேட்கள் சரியான நேரத்தில் வரும் என்றும் தெரிவித்துளளார்.

Bigil Update Archana Kalpathi