தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மக்களின் மனம் கவர்ந்த முக்கிய நிகழ்ச்சி பிக்பாஸ்.இதுவரை நடந்து முடிந்த மூன்று சீசனும் பெரிய வெற்றியை பெற்றதோடு, நல்ல TRPயையும் பெற்றிருந்தது.இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.கமல்ஹாசனின் அரசியல் வசனங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

மூன்று சீசனில் பங்கேற்ற போட்டியாளர்களும் மக்கள் மத்தியில் பிரபலங்களாக மாறிவிட்டனர்..குறிப்பாக மூன்றாவது சீசனில் பங்கேற்ற பல போட்டியாளர்கள் பெரிய நட்சத்திரங்களாக மக்கள் மத்தியில் அவதரித்துள்ளனர்.இந்த தொடரின் நான்காம் சீசன் விரைவில் தொடங்கவுள்ளது என்றும் இதையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் தொடரின் மூன்றாவது சீசனில் மிகவும் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் நடன இயக்குனர் சாண்டி.பிக்பாஸ் தொடருக்கு முன்பே தனது நடன அசைவுகளுக்காக பேர்போன சாண்டி.இந்த தொடரில் செய்த சேட்டைகளால் பலகோடி இதயங்களில் இடம்பிடித்துவிட்டார்.இவரது மகளும் இவருடன் இணைந்து பிரபலமாகி விட்டார்.

பிக்பாஸில் இருந்து வெளியே வந்த பின் பல படங்களில் பிஸியாக பணியாற்றி வந்தார் சாண்டி.கொரோனா காரணமாக போடப்பட்ட லாக்டவுன் காரணமாக தனது நடன வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வந்தார் சாண்டி.தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வரும் பூஸ்ட் கிரிக்கெட் சேலஞ்சை சாண்டி ஏற்றுள்ளார்.இந்த வீடீயோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடீயோவை பார்த்த ரசிகர்கள் அட சாண்டிக்கு இப்படி ஒரு திறமையா என்று வீடீயோவை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#playathomechallenge with boost 😬 @boost.india @virat.kohli My score is 100 !!!! Century 🙈🙈🙈🙈

A post shared by SANDY (@iamsandy_off) on