தனுஷின் துள்ளவதோ இளமை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஷெரின்.விசில் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக அவதரித்தார் ஷெரின்.அந்த படத்தில் இடம்பெற்ற அழகிய அசுரா பாடல் ஷெரினுக்காகவே மிகவும் பிரபலமாக இருந்ததது.இதற்கு பிறகு உற்சாகம்,நண்பேன்டா என்று சில படங்களில் மட்டுமே தோன்றினார் ஷெரின்.

கடந்த வருடம் நடைபெற்ற பிக்பாஸ் தொடரின் மூன்றாவது சீசனில் ஷெரின் கலந்துகொண்டார்.இந்த தொடரின் முக்கிய நபர்களில் ஒருவராக ஷெரின் திகழ்ந்தார்.இந்த தொடரின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றார் ஷெரின்,தமிழக்தின் அனைத்து இடங்களுக்கும் ஷெரின் பிரபலமான ஒரு நபராக மாறினார்.இந்த தொடரில் இருந்து வெளியே வந்தபிறகும் இவரது இன்ஸ்டாகிராமில் இவர் போடும்  லைக்குகள் அள்ளும்.

கொரோனா காரணமாக பல பிரபலங்களும் தங்கள் நேரங்களை சமூகவலைத்தளங்களில் ரசிகர்களுடன் கழித்து வருகின்றனர்.ஷெரின் ரசிகர்களுடன் டச்சில் இருக்க அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளித்தும் வந்தார்.பிக்பாஸ் தொடரிற்கு செல்லும்போது ஷெரின் நல்ல உடலெடையுடன் இருந்தார் ஆனால் இந்த தொடரில் இருந்து வெளியேவந்த போது ஷெரினின் ட்ரான்ஸ்பார்மஷனை கண்டு பலரும் ஆச்சரியத்தில் இருந்தனர்.

நடிக்கவந்த போது எப்படி இருந்தாரோ அப்படி மீண்டும் உடல் எடையை குறைத்து மாறினார் ஷெரின்.மீண்டும் தமிழக இளைஞர்களின் கனவுக்கன்னியாக மாறினார்.இவர் எப்படி உடலெடையை குறைத்தார் என்று பலரும் ஆச்சரியப்பட்டு வந்த வேளையில்.நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிக்பாஸ் தொடரில் தான் அணிந்திருந்த உடையை தற்போது மீண்டும் அதே உடையை அணிந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ ஒன்றை  பதிவிட்டிருந்தார்.அதில்அவர் கூறியுள்ளதாவது இரண்டு புகைப்படங்களுக்கு ஒரு வருடம் மற்றும் 10 கிலோக்கள் வித்தியாசம் இருக்கும் நான் அப்போது இருந்ததை பற்றியும் கவலை படவில்லை இப்போது இருப்பதாய் பற்றியும் கவலைப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.இதனையடுத்து பலரும் ஷெரினிடம் எப்படி உடல் எடையை குறைத்தீர்கள் என்று கேள்வியெழுப்ப ஆரம்பித்தனர்.இதனை தொடர்ந்து ஷெரின் உடல் எடையை குறைக்க சில டிப்ஸை ரசிகர்களுக்கு தெரிவிக்க ஒரு வீடியோ ரெகார்ட் செய்து பதிவிட்டார்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்