பிரபல மாடல் அழகியும் நடிகையுமான சனம் ஷெட்டி பல விளம்பர படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழ், தெலுங்கு கன்னடம் மற்றும் மலையாள மொழி படங்களிலும் நடித்துள்ளார். இருந்த போதும் இதுவரை எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை சனம் ஷெட்டி. அதைத்தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார் சனம்.

இதில் ஆரம்பத்தில் எல்லா விஷயங்களிலும் மூக்கை நுழைத்து வந்தார் சனம் ஷெட்டி. இதனால் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார். இருந்தபோதும் இறுதியில் ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை சம்பாதித்தார் சனம். சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக உள்ள சனம் ஷெட்டி அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். 

இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு சனம் ஷெட்டி செய்த போட்டோவும், அவர் செய்த பதிவும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. சனம் ஷெட்டி தனது காதலருடன் டின்னர் சாப்பிடும் போட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் சனம் ஷெட்டியின் கையை பிடித்தவாறு புகைப்படம் உள்ளது. 

அந்த போட்டோவுக்கு என் உலகை ஒளிரச் செய்துவிட்டீர்கள் மோனே என்று பதிவிட்டுள்ளார் சனம் ஷெட்டி. சனம் ஷெட்டியின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் உங்களின் காதலர் மலையாளியா என்றும் கேட்டு வருகின்றனர். மேலும் காதலரின் முகத்தை காட்டுங்கள் சனம் ஷெட்டி என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

சனம் ஷெட்டி ஏற்கனவே இலங்கையை சேர்ந்த மாடலான தர்ஷனை காதலித்தார். தர்ஷனுடன் திருமண நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. ஆனால் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற தர்ஷன், நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த பிறகு சனம் ஷெட்டியுடனான காதலை முறித்துக் கொண்டார்.

இதனை தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி நிச்சயதார்த்தம் செய்துவிட்டு தர்ஷன் ஏமாற்றிவிட்டதாக சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார் சனம் ஷெட்டி. மேலும் இருவரும் மாறி மாறி பிரஸ் மீட்டு கொடுத்து தங்களின் பக்க நியாயத்தை கூறி வந்தனர். அவர்களின் காதல் முறிவு விவகாரம் பல நாட்களில் ஊடகங்களில் பேசப்பட்டது. இந்நிலையில் சனம் ஷெட்டி மீண்டும் காதலில் விழுந்திருப்பது அவருடைய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.