தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ரம்யா பாண்டியன். கடந்த 2015-ம் ஆண்டு டம்மி டப்பாசு எனும் படம் மூலம் அறிமுகமானவர், அதைத்தொடர்ந்து ஆண் தேவதை படத்தில் நடித்தார். ராஜூமுருகன் இயக்கத்தில் வெளியான ஜோக்கர் திரைப்படத்தில் மல்லிகாவாக இவரது நடிப்பு பலரது பாராட்டுக்களை பெற்றது. 

படங்களில் நடித்திருந்தாலும் அவர் மிகப் பெரிய அளவில் வைரலானது அவர் நடத்திய மொட்டை மாடி போட்டோஷூட் காரணமாகத் தான். சேலையில் அவர் தந்த போஸ் ரசிகர்களை ஈர்த்தது. அந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் அதை ஒரே நாளில் இணையத்தில் வைரலாக்கினார்கள்.

அதற்கு பிறகு தான் ரம்யா பாண்டியன் சின்னத் திரையில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆரம்பித்தார். திரைப்படங்கள் அவரை பிரபலமாக்கியதை விட பல மடங்கு சின்னத்திரை நிகழ்ச்சிகளை அவரை பிரபலமாக்கியது. தற்போது அவர் பிக் பாஸ் நான்காவது சீசனில் கலந்து கொண்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் வீட்டில் கடந்து வந்த பாதை என்ற பெயரில் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. 

அதில் அவர்கள் இதற்கு முன்பு கடந்து வந்த பாதை மற்றும் பிக் பாஸ் வீட்டில் நுழைந்தது எப்படி என்பதை பற்றி கூற வேண்டுமென டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. அதன் படி போட்டியாளர்கள் அனைவரும் தங்கள் கதையை கூறினர். அந்த வரிசையில் ரம்யா பாண்டியனும் தான் கடந்து வந்த பாதையைப் பற்றி பேசினார். தான் நடிக்க வரும் முன்பு செய்த வேலையைப் பற்றியும் கூறினார். சென்னை சத்யம் தியேட்டர் முன்பு மக்களுக்கு நோட்டீஸ்  வழங்கும் வேலையைத் தான் அவர் முதலில் செய்தாராம். கல்லூரி படிக்கும் காலங்களில் பாக்கெட் மணிக்காக இதை செய்ததாக தெரிவித்தார். 

பிக்பாஸ் செல்வதற்கு முன் முகிலன் என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார் ரம்யா பாண்டியன். உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட முகிலன் வெப் சீரிஸ் கேங்க்ஸ்டர் கதையம்சத்தை கொண்டதாகும். zee5 தளத்தில் வெளியான இந்த வெப் சீரிஸில் கார்த்திக் ராஜ் ஜோடியாக நடித்திருந்தார் ரம்யா பாண்டியன். இதில் ரம்யா பாண்டியன் நடித்த சில காட்சிகள் சர்ச்சையை கிளப்பி வருகிறது. 

இந்நிலையில் ரம்யா பாண்டியனின் கல்லூரி கால புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. கண்ணாடியுடன் சிம்பிளாக இருக்கும் ரம்யாவின் இந்த புகைப்படம் அவரது ரசிகர்களை கவர்ந்து வருகிறது. பிக்பாஸில் இருக்கும் ரம்யாவுக்கும், போட்டோஷூட் ரம்யாவுக்கும், கல்லூரி கால ரம்யாவுக்கும் பல வித்தியாசங்கள் உள்ளது என கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.