சின்னத்திரையில் முன்னணி மெகா தொடர்களில் நடிகராகவும், விஜய் டிவியின் தொகுப்பாளராகவும் வலம்வந்த கவின், பிக் பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தார். மேலும்  வெள்ளித்திரையிலும் சத்ரியன் மற்றும் நட்புனா என்னனு தெரியுமா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தொடர்ந்து  நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஹாரர் த்ரில்லர் திரைப்படமாக வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற லிப்ட் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த கவின், நடிகராக மட்டுமல்லாமல் உதவி இயக்குனராகவும் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் உடன் இணைந்து டாக்டர் மற்றும் பீஸ்ட் உள்ளிட்ட திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார் .

அடுத்ததாக ரௌடி பிக்சர்ஸ் சார்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் இயக்குனர் அருண் இயக்கத்தில் உருவாகும் ஊர்க்குருவி படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இதனிடையே வெப் சீரிஸில் களமிறங்கியுள்ள கவின் இயக்குனர் ஈனாக் இயக்கத்தில் நடித்துள்ள  வெப்சீரிஸ் ஆகாஷ்வாணி. aha Tamil தளத்தில் அழகிய ரொமாண்டிக் வெப் சீரிஸாக வெளிவர இருக்கும் ஆகாஷ்வாணி வெப் சீரிஸில் கவினுக்கு ஜோடியாக நடிகை ரெபா மோனிகா ஜான் நடித்துள்ளார்.

மேலும் சரத் ரவி, தீபக் பரமேஷ், அபிதா வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முன்னதாக ஆகாஷ்வாணி வெப்சீரிஸின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு டப்பிங் பணிகளும் நிறைவடைந்தது. இந்நிலையில் ஆகாஷ்வாணி வெப்சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற ஜனவரி 29ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.