சந்திரலேகா படத்தின் மூலம் திரையில் அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். படங்கள் கை கொடுக்காத நிலையில் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் நுழைந்து உலகளவில் பிரபலமானார். பிக் பாஸ் 3 வீடு பரபரப்பாக இருந்ததற்கு காரணமே வனிதா தான். அதனைத்தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். தற்போது சொந்தமாக யூடியூப் சேனலை துவங்கி நடத்தி வருகிறார்.

நடிகை வனிதா விஜயகுமாருக்கும் பீட்டர் பாலுக்கும் திருமணம் நடந்ததில் இருந்து சமூக வலைதளங்களில் அவர்களை பற்றி தான் அவ்வப்போது பேசப்படுகிறது. சில நாட்கள் முன்பு வீட்டில் லக்ஷ்மி குபேரன் பூஜை செய்து பதிவு செய்திருந்தார் வனிதா. விஜய் டிவியில் ஏகப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கலக்கி வருகிறார் வனிதா விஜயகுமார். பிக்பாஸ் தமிழ் சீசன் 4ன் பிரம்மாண்ட துவக்க விழா நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி விஜய்யுடன் படத்தில் நாயகியாக நடிக்கும் போது, ஷூட்டிங் ஸ்பாட்டில் எஸ்பிபி பாடிய மலரே மெளனமா பாடலை பலமுறை பாட சொல்லி விஜய்யை நச்சரிப்பேன். அவர் என்னை ஒரு மாதிரி லுக் விட்டு பார்த்துட்டு எனக்காக பாடுவார் என ட்விட்டரில் சமீபத்தில் பதிவு ஒன்றை செய்திருந்தார். வனிதாவின் இந்த ட்வீட் பல தளபதி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 

தற்போது விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் வனிதா, ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ஏதாவது ஒரு வீடியோவை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது அவர் பகிர்ந்துள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் அவர் பேசியிருப்பதாவது, வாழ்க்கையில நமக்குன்னு ஒரு அடையாளம் வேணும். ஒருத்தரோட முகமூடிக்கு பின்னாடி ஒளியாதீங்க.. அது உங்களுக்கு பிடிச்ச நடிகரா இருக்கலாம்.. உங்க அப்பா அம்மாவா இருக்கலாம்.. ஆனா உங்களோட முகவரி உங்களோட அடையாளம்..கிரியேட் பண்ணுங்க உங்களால் முடியும் என்று பேசியுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் இதை யாருக்கு சொல்றீங்க என கேட்டு வருகின்றனர்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#shorts #motivation #vv #vanithavijaykumar

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on