விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் பேராதரவை பெற்றிருந்த நிகழ்ச்சி பிக்பாஸ்.கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் சமீபத்தில் நிறைவடைந்திருந்தது.இந்த சீசனில் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.இதில் ஆரி முதலிடத்தை பிடித்து அசத்தினார்.

இவரை தவிர இந்த தொடரில் பங்கேற்ற பாலாஜி,ஷிவானி,அனிதா சம்பத்,ரியோ,அர்ச்சனா,நிஷா,கேப்ரியல்லா,ஆஜீத்,ரம்யா பாண்டியன்,சம்யுக்தா,ஜித்தன் ரமேஷ்,சோம் சேகர்,சுரேஷ் சக்ரவர்த்தி என்று பலரும் மக்கள் மத்தியில் ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்று நட்சத்திரங்களாக மாறியுள்ளனர்.

பிரபல மாடல் மட்டும் நடிகையாக ஆக இருந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று அனைவர் மனதிலும் இடம்பிடித்தவர் சம்யுக்தா.இவர் சன் டிவியின் சந்திரகுமாரி சீரியலில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார்,தொடர்ந்து பிக்பாஸில் கிடைத்த வரவேற்பு பட்டிதொட்டி எங்கும் கொண்டு சேர்த்தது.சமீபத்தில் கலர்ஸ் தமிழின் அம்மன் தொடரில் சிறப்பு வேடத்தில் நடித்து அசத்தி வந்தார் சம்யுக்தா.

இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ் ஆக இருக்கும் சம்யுக்தா புகைப்படம்,வீடியோ என்று ஏதேனும் ஒன்றை ஷேர் செய்து வருவார்.நடனத்திலும்,உடற்பயிற்சியிலும் ஆர்வம் கொண்ட இவர் அதுசம்மந்தமான வீடியோக்களை பகிர்ந்தும் வருவார்.பிரபல தொகுப்பாளினி பாவனாவும் இவரும் நெருங்கிய நண்பர்கள் இருவரும் இணைந்து அடிக்கடி நடன வீடியோக்கள் பகிர்ந்து வருவார்கள்.பாவனா ஐபிஎல் உள்ளிட்டவற்றிற்கு தொகுப்பாளராக இருந்துவிட்டு திரும்பியதை அடுத்து தங்கள் புதிய வீடியோ ஒன்றை இருவரும் பகிர்ந்துள்ளனர்.