கோமாளி படத்தின் சூப்பர்ஹிட் வெற்றியை தொடர்ந்து ஜெயம் ரவி தனது 25ஆவது படமான பூமி படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தை ரோமியோ ஜூலியட்,போகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய லக்ஷ்மன் இயக்கியுள்ளார்.டி இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Bhoomi Heroine Niddhi Agerwal Learns Tamil

Home Movie Makers இந்த படத்தை தயாரித்துள்ளனர்.நிதி அகர்வால் இந்த படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.இந்த படத்தின் டீஸர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படம் மே 1அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது ஆனால் கொரோனா காரணமாக ரிலீஸ் தள்ளிப்போனது.

Bhoomi Heroine Niddhi Agerwal Learns Tamil

போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகளை நேற்று முதல் தொடர தமிழக அரசு அனுமதி வழங்கியது.இந்த படத்தின் டப்பிங் இன்று தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் நாயகி நிதி அகர்வால் தமிழ் கற்றுக்கொள்வதாக பதிவிட்டுள்ளார்.இந்த படத்தின் டப்பிங்கிற்காக இவர் தமிழ் கற்றுக்கொள்ளலாம் என்று தெரிகிறது.இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

Bhoomi Heroine Niddhi Agerwal Learns Tamil